சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு - கோவையில் விவசாயிகள் சங்க தலைவர் வரவேற்பு

சாதி வேறுபாடின்றி, பொருளாதாரம், கல்வி, மருத்துவம், முன்னேற்றம், ஒருமைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், நீண்ட காலமாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த கோரிக்கை ஒரு தீர்வு காண்கின்ற வகையில் தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிப்பை வரவேற்பதாக கூறினார்.

இதை வைத்துக்கொண்டு அரசியல் ரீதியாக அல்லது மக்களிடத்தில் பிரிவினையை, ஏற்படுத்தக்கூடிய சில நபர்களும் இருப்பதாக கூறிய அவர், சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்துள்ளதால், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த சாதி வாரி கணக்கெடுப்பு, ஏற்ற தாழ்வு இல்லாமல், சாதி வேறுபாடின்றி, பொருளாதாரம், கல்வி, மருத்துவம், முன்னேற்றம், ஒருமைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த கணக்கெடுப்பிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறிய அவர், இந்த முயற்சிக்கு தமிழ்நாடு விவசாய சங்கம் முழுமையான வரவேற்பை வழங்குவதாக தெரிவித்தார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...