திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிபாளையம் பஞ்சாயத்தைச் சேர்ந்த சுமார் 150 மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படாததால் இன்று காலை பல்லடம் தாராபுரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காததாலும் குடிநீர் சப்ளை 18 நாட்கள் ஒரு முறை வருவதாகவும். உப்பு தண்ணீர் சப்பளை இரண்டு மணிநேரம் மட்டும் வருகிறது. இதனால் இந்த பகுதி மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று குடியிருப்பாளர்கள் பஞ்சாயத்து உறுப்பினர்களை சந்தித்து பலமுறை கோரிக்கைகள் வைத்தும் அரசாங்க அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர்.

உள்ளாட்சி தேர்தல்களில் தாமதம் காரணமாக இந்த பகுதி மக்களின் நிலைகளை கண்டுகொள்ள கவுன்சிலர் இல்லாததாலும், இதனால் அதிகாரிகளும் மக்கள் பிரச்சனைகளுக்கு முறையான பதில்களும் வழங்காததாலும் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்குதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. அதிகாரிகள் தற்போது பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.