தமிழக அரசின் துணையோடு தான் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது - கோவை ஆட்சியரிடம் தேமுதிக புகார்

அரசின் துணையோடு தான் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. கள்ளச்சாராயம் மரணத்திற்கு திமுக அரசு தான் முற்றிலும் காரணம். கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் தேமுதிக சார்பில் கருப்பு சட்டை அணிந்து புகார் மனு அளிக்கப்பட்டது.


கோவை: தமிழக அரசின் துணையோடு தான் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. கள்ளச்சாராயம் மரணத்திற்கு திமுக அரசு தான் முற்றிலும் காரணம். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை, கஞ்சா, கள்ளச்சாராய விற்பனையை உடனடியாக தமிழக அரசு தடுக்க வேண்டும்.



கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ (CBI) விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் தேமுதிக சார்பில் கருப்பு சட்டை அணிந்து வந்து புகார் மனு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிர்வாகி சந்துரு, தமிழகம் முழுவதும் டாஸ்மாக், கஞ்சா, கள்ளச்சாராய விற்பனையை உடனடியாக தமிழக அரசு தடுக்க வேண்டும். தமிழக அரசின் துணையோடு தான் கள்ளச்சாராய விற்பனையும், கஞ்சா விற்பனையும் நடைபெறுகிறது. இதை உடனடியாக மாவட்ட ஆட்சியர் தடுக்க வேண்டும். மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி கள்ளச்சாராயம் குடித்து 63 பொதுமக்கள் மரணத்திற்கு பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும். கள்ளச்சாராய மரணத்திற்கு ஆளுகின்ற திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய வழக்கை சிபிஐ(CBI) விசாரணைக்கு உடனடியாக மாற்ற தாங்கள் பரிந்துரை செய்ய வேண்டும். தமிழகத்தில் நடக்கும் அனைத்து சாராய ஆலைகளும் ஆளும் கட்சியினரால் நடத்தப்படுகிறது. எனவே சாராய ஆலைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...