நீட் விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் தரவேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்

மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டின் நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


கோவை: நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். நீட் தேர்வு வேண்டாம் என்பதால் அதனை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். தமிழ்நாட்டின் குரல், இந்தியாவின் குரலாக எதிரொலித்து வருகிறது என்று ஒன்றிய அரசு கோரிய கேள்விகள் அனைத்துக்கும் விளக்கங்கள் அளித்துள்ளது தமிழ்நாடு அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீட் தேர்வு வந்த பிறகு கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக ஆகிவிட்டது. நீட் தேர்வை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். நீட் தேர்வு தொடர்பான தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரல் தற்போது நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. போட்டித் தேர்வுகளால் நமது மாணவர்கள் நிலை குலைந்துள்ளனர். நீட் தேர்வு கால தாமதமாக தொடங்கியதை காரணம் காட்டி விதிகளுக்கு முரணாக கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.

மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டின் நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணைய சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக வலியுறுத்துகிறது.

மருத்துவத் துறையிலும் பொருளாதார குறியீடுகளிலும் நாட்டின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அனைத்தையும் ரத்துசெய்தவர் கலைஞர். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக மாணவர், மருத்துவர் அணி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. நீட் தேர்வில் சமூகத்தில் அக்கறை உள்ள அனைவரிடமும் அசைக்க முடியாத கருத்தொற்றுமை உள்ளது. நீதிபதி ஏ.கே.ராஜன் குழு நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறியிருந்தது. நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைப்படி நீட்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் விலக்கு கோரி தனி சட்ட மசோதாவும் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கு மனிதநேய மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...