நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து தூய்மை பாரதம் என்ற இலக்கை அடையும் வகையில் தூய்மை பணிகளை மேற்கொண்டது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் நடைபெற்ற இந்த தூய்மை பணியில்
துணை காவல்துறை கண்காணிப்பாளர்கள் மணிகண்டன், பாஸ்கரன், நகராட்சி ஆணையர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த தூய்மை பணியின் போது, தாவிரவியல் பூங்கா சாலை, என்.சி.எம்.எஸ் பகுதி, கோத்தகிரி, குன்னூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பி.1, ஜி1, புது மந்து, மஞ்சூர் உள்ளிட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் 200 பேரும், 100 நகராட்சி பணியாளர்களும் பங்கேற்றனர். மேலும், 10 நகராட்சி வாகனங்களும் இப்பணிக்கு ஈடுபடுத்தப்பட்டன.

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் உதகையின் தூய்மையை பாதுகாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து நடத்திய இந்த தூய்மை பணி மக்களிடமும் சுற்றுலா பயணிகளிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.