கோவையில் கடந்த மாதம் பாரூக் எனும் வாலிபர் சில மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரின் நினைவாக திராவிட விடுதலைக் கழகம் சார்பில் உருவப் படம் திறப்பு விழா கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள அண்ணாமலை அரங்கத்தில் நடைபெற்றது. இதனை, திராவிட விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், பாரூக்கின் கொலை குறித்தான விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் சிறந்த புலனாய்வு செய்து கொலை செய்ய தூண்டியவர்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும். இதற்கு திராவிட விடுதலைக் கழகமும் உறுதுணையாக இருக்கும்.

பெரியார் இயக்கம் எப்போதும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கும். பெரியார் இயக்கமும், முஸ்லீம் சமுதாயமும் ஒரு நல்லிணக்கமாக இருந்த உறவை தற்போது மத தூய்மை வாதம் பேசுகிற வெறி அமைப்பினர் ஊட்டிய காரணத்தினால் பெரிய அச்சம் ஏற்படுகிறது.
இந்துத்துவ ஆட்சி நடக்கிற வேலையில் இந்த கொலை வழக்கு திசை திரும்பி விடுமோ என்ற எண்ணம் நிலவுகிறது. இருந்தும் இந்த கொலை வழக்கில் சம்பந்தம் உடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் எவ்வித பாதிப்பும் இஸ்லாமியர்களுக்கும் பெரியார் திராவிட கழகத்திற்கும் ஏற்படாது என்றார்.