திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 60 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 6.4 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வெள்ளகோவில் வாய்க்கால் மேடு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 60 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 6.4 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (30) என்பவர் தனது வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வெள்ளகோவில் போலீசார் மனோஜின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் 60 லிட்டர் சாராய ஊரல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விற்பனைக்காக 6.4 லிட்டர் சாராயம் காய்ச்சி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் மனோஜுடன் சேர்ந்து அவரது நண்பர்களான செல்வராஜ் (53) மற்றும் குட்டி முருகன் (44) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட 60 லிட்டர் சாராய ஊரலை போலீசார் கீழே ஊற்றி அழித்தனர்.
காவல் நிலையத்திற்கு அருகாமையிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வெள்ளகோவில் போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.