கோவை 'கவுண்டம்பாளையம்' திரைப்படம் வெளியீடு ஒத்திவைப்பு - நடிகர் ரஞ்சித் பேட்டி

கோவையில், 'கவுண்டம்பாளையம்' திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இயக்குனரும் நடிகருமான ரஞ்சித் அறிவித்துள்ளார். படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், முதல்வர் மற்றும் செய்தித்துறை அமைச்சரை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் நாளை வெளியாக இருந்த 'கவுண்டம்பாளையம்' திரைப்படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குனரும் நடிகருமான ரஞ்சித் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வரையும், செய்தித்துறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த படத்தை வெளியிட கூடாது என்பதில் பலர் முனைப்போடு இருப்பதாகவும், திரையரங்க உரிமையாளர்கள் சொல்லும் போது வருத்தமாக இருப்பதாகவும் கூறினார்.

"நாடக காதலை பற்றியும், பெற்றோர்களின் வலியையும் படமாக எடுத்துள்ளேன். இதற்கு பல இடங்களிலிருந்து எதிர்ப்பு வருகிறது," என்று ரஞ்சித் விளக்கினார். மேலும், "ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும். என் வாயில் வந்த கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. நான் அரசியல்வாதி கிடையாது. இந்த படத்தின் வெற்றிதான் என்னை எதிர்ப்பவர்களுக்கு நான் சொல்லும் பதில்," என்றும் அவர் கூறினார்.

"செண்சார் சான்றிதழ் வாங்கியும் இந்த படத்தை என்னால் வெளியிட முடியவில்லை. ஆனால் யார் எதிர்க்கிறார்கள் என்று நான் சொல்ல விரும்பவில்லை. தமிழக அரசின் அனுமதி பெற்று இந்த படத்தை விரைவில் வெளியிடுவேன்," என்று ரஞ்சித் தெரிவித்தார்.

திரையரங்கில் படத்தை திரையிட்டால் கலாட்டா செய்வோம் என்று பலர் திரையரங்க உரிமையாளர்களை மிரட்டுவதாக ரஞ்சித் குற்றம்சாட்டினார். "திரையரங்கின் பாதுகாப்பு மிக முக்கியம். ஒரு நாடக காதலை பற்றியும், ஒரு நல்ல குடும்ப கதையை நான் எடுத்துள்ளேன். ஆனால் மிரட்டி என்னை போன்ற எளிய கலைஞனை வளர விடாமல் தடுக்கிறார்கள்," என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, கோவை மாநகர காவல் ஆணையரிடம் படத்தின் எதிர்ப்பு மற்றும் மிரட்டல் தொடர்பாக புகார் மனு அளித்ததாகவும் ரஞ்சித் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...