சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மன்னிப்பு கோரிய பாதிரியார் பிரின்ஸ் கால்வின்

கோவை உப்பிலிபாளையம் சிஎஸ்ஐ இமானுவேல் ஆலய பாதிரியார் பிரின்ஸ் கால்வின், இந்து மக்களை புண்படுத்தும் விதமாக பேசியதற்காக மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில் இந்த மன்னிப்பு வெளியாகியுள்ளது.


கோவை: கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ இமானுவேல் ஆலயத்தின் பாதிரியார் பிரின்ஸ் கால்வின், சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 16ஆம் தேதி ஆலயத்தில் நடைபெற்ற ஆராதனை நிகழ்ச்சியில் பிரின்ஸ் கால்வின் பேசிய கருத்துகள், இந்து மற்றும் கிறிஸ்துவ சமூகங்களிடையே பகைமையை ஊக்குவிக்கும் விதமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வீடியோ காட்சிகள் பேஸ்புக் மற்றும் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இதையடுத்து, இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். காவல் உதவி ஆய்வாளர் ரேஸ்கோர்ஸ் போலீஸில் புகார் அளித்ததன் பேரில், பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது சாதி, மத, இனங்களிடையே விரோத உணர்ச்சியை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தான் பேசிய கருத்து இந்து சகோதரர்கள் மனதை புண்படுத்தியுள்ளது. என்னுடைய நோக்கம் எவரையும் புண்படுத்துவது இல்லை. கலாச்சார சீரழிவு மற்றும் சாதி ஏற்றத்தாழ்வு குறித்து நான் பேசினேன். என்னுடைய பேச்சால் புண்பட்ட இந்து சகோதர, சகோதரிகளிடம் நான் முழு மனதளவில் என்னுடைய வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்துத்துவ அமைப்புகள் பாதிரியாரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், இந்த மன்னிப்பு வீடியோ வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...