கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கோவிந்தசாமி நகர் பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இலவச நிலம் மற்றும் வீட்டுமனை பட்டா கேட்டு இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளித்தனர்.
அதில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே புறம்போக்கு நிலத்தில் 200-கும் மேற்பட்ட குடும்பங்களாக வசித்து வருகிறோம். இந்நிலையில் கடந்த 12ம் தேதி ரயில்வே துறை அப்பகுதி மக்கள் தற்போது வசிக்கும் இடத்தை காலி செய்ய வேண்டி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பல ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் நிலையில், எங்கள் குழந்தைகள் அருகாமையில் உள்ள பள்ளிகளில் பயின்று வருவதால் சுற்று வட்டார பகுதியிலேயே அரசு சார்பில் காலி இடம் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.