தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி: ஜூலை 8 அன்று நடைபெறுகிறது

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 2024 அன்று தேனீ வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சிக் கட்டணம் ரூ.590. தேனீ வளர்ப்பின் அடிப்படைகள் மற்றும் நடைமுறைகள் கற்பிக்கப்படும்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் தேனீ வளர்ப்பு பயிற்சி, ஜூலை மாதத்திற்கான அமர்வு வரும் ஜூலை 8, 2024 திங்கட்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

இந்த ஒருநாள் பயிற்சியில் தேனீ இனங்களை அடையாளம் காணுதல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்களுக்கு உணவளிக்கும் பயிர்கள், மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்கள், தேன் பிரித்தெடுக்கும் முறை, தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் அன்றைய தினம் காலை 9 மணிக்கு பூச்சியியல் துறைக்கு நேரில் வந்து தங்களது அடையாள ஆவணங்களை சமர்ப்பித்து, பயிற்சிக் கட்டணமாக ரூ.590-ஐ செலுத்த வேண்டும். பயிற்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பயிற்சியின் முடிவில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 0422-6611214, மின்னஞ்சல்: [email protected].

Newsletter

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...