பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
கோவை: கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை காவல்துறையினர் மாக்கினாம்பட்டி அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது, கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த ஜபருல்லா மகன் சேக்பரீத் (23) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.30,000 மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே 1 ஆம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் மூலம், இதுவரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 109 நபர்கள் மீது 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 188.725 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இது போன்ற குற்றங்கள் குறித்து தகவல் தெரிவிக்க பொதுமக்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என்றும், தகவல் தெரிவிப்போரின் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.