அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தந்தை சொத்து அல்ல; ஒன்றரை கோடி தொண்டர்களின் சொத்து - கே.சி. பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி யாரையும் கட்சியில் இணைத்து கொள்ளாமல் இருப்பதற்கு அதிமுக அவரது தந்தை சொத்து அல்ல. அதிமுக ஒன்றை கோடி தொண்டர்களின் சொத்து என்றும் ஒருங்கிணைப்பு குழு சார்பாக முதல்கட்டமாக சசிகலாவை சந்திக்க இருப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி.கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.


Coimbatore: கோவை நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி, எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

கடந்த 13 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தன் மீது அவதூறாக பேசியதன் அடிப்படையில் கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக கே.சி. பழனிச்சாமி தெரிவித்தார். அதிமுகவின் வாக்குகள் திமுகவிற்கு சென்றிருப்பதாகவும், கோவையிலும் வாக்கு சதவீதம் குறைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



"அதிமுகவை வெற்றி பெற வைக்க நினைக்கும் ஒவ்வொருவரையும் அரவணைப்பது தான் நல்லது. உடல்நிலை கருதிதான் ஜானகி அம்மா ஒதுங்கிக் கொண்டார். பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைந்தார். அதை ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். ஆனால் அது தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார்," என்று கே.சி. பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிச்சாமி இன்னும் கிளை செயலாளர் அளவிலேயே செயல்படுவதாகவும், யாரையும் அரவணைக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் கே.சி. பழனிச்சாமி தெரிவித்தார். மேலும், எடப்பாடி பேசுவது எல்லாம் அரசியல் அறியாமையில் பேசுவதாகவும் அவர் கூறினார்.

"அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் தந்தை சொத்து அல்ல. அது ஒன்றரை கோடி தொண்டர்களின் சொத்து," என்று கே.சி. பழனிச்சாமி வலியுறுத்தினார். அதிமுக தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியற்றவர் என்றும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

இறுதியாக, ஒருங்கிணைப்பு குழு சார்பாக முதல் கட்டமாக சசிகலாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கே.சி. பழனிச்சாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...