கோவை மாவட்ட காவல்துறை பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் 52.674 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்களின் உத்தரவின் பேரில், போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இன்று (07.07.2024) மாக்கினாம்பட்டி பிரிவு அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையின் போது, நான்கு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் மகன் முகமது அபிதீன் (51) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சுமார் 52.674 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டு, கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல்துறையினரால் சிறப்பு அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 98 நபர்கள் மீது 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சுமார் 1247.634 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இது போன்ற குற்றங்கள் குறித்து தகவல் தெரிவிக்க பொதுமக்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என்றும், தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.