மத்திய அரசின் புதிய சட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு: கோவை ரயில் நிலையம் முன் வழக்கறிஞர்கள் போராட்டம்

கோவை ரயில் நிலையம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் மூன்று புதிய சட்டப் பெயர் மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் நடைபெற்றது. புதிய சட்டங்களின் பெயர்களை திரும்பப் பெற வலியுறுத்தினர்.


கோவை: மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள மூன்று முக்கிய சட்டங்களின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை ரயில் நிலையம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம் மற்றும் சாட்சிகள் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களின் பெயர்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தியதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.



போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், புதிய சட்டங்களின் பெயர்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த சட்ட மாற்றங்களால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக, கைதிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் அவர்கள் எழுப்பினர்.



வழக்கறிஞர்கள் ரயில் நிலையத்திற்குள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு கருதி போலீசார் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர். போராட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள், ஒருவரை கைவிலங்கு மாட்டி அழைத்துச் செல்வது மிகவும் வேதனையான விஷயம் என்றும், அதனை மத்திய அரசு அமல்படுத்தியது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...