கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் அதிகரிக்க நடவடிக்கை

கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவைகளை அதிகரிக்க விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இது தொழில்துறையினர் மற்றும் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமான சேவைகளை விரைவில் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவல் தொழில் துறையினர் மற்றும் விமான பயணிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கொங்கு குளோபல் போரம் அமைப்பின் இயக்குநர் சதீஷ் கூறுகையில், "கோவை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். நில ஆர்ஜித பணிகள் நிறைவடைந்துள்ளது வரவேற்கத்தக்கது. விரைவில் நிலங்கள் ஏஏஐ நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன," என்றார்.

சமீபத்தில் கோவையில் விமான நிறுவன அதிகாரிகளுடன் சிஐஐ சார்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன. ஸ்கூட் நிறுவனம் சிங்கப்பூருக்கு வாரத்தில் எட்டு சேவைகள் வழங்க வேண்டும் என்றும், 236 பேர் அமரக்கூடிய ஏ 321 ரக விமானங்களை அதிகம் இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இண்டிகோ நிறுவனம் தற்போது 20 உள்நாட்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது. கோவை-புனே இடையேயான இரவு சேவையை காலை நேரத்திற்கு மாற்றவும், கோவை-கோவா இடையேயான காலை 7 மணி சேவையை மதியம் 12 மணிக்கு மாற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், கோவை-பெங்களூரு, கோவை-திருவனந்தபுரம், கோவை-மங்களூரு இடையே சிறிய ரக விமான சேவைகளைத் தொடங்கவும் வலியுறுத்தப்பட்டது.

கோவையில் இருந்து சிங்கப்பூர், இலங்கை மற்றும் அபுதாபிக்கு விமான சேவை தொடங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏர்இந்தியா தற்போது டெல்லி-கோவை-டெல்லி இடையே இரண்டு சேவைகளை வழங்கி வருகிறது. விஸ்தாரா ஒரு விமான சேவையை வழங்குகிறது, மேலும் விரைவில் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கோவை-டெல்லி இடையே காலை விமான சேவை வழங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன் மூலம் கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் டெல்லியில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான ஏர் இந்தியா சேவைகளைப் பயன்படுத்த முடியும்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற விமான நிறுவன அதிகாரிகள், கோவை தங்களுக்கு வணிக ரீதியாக சிறந்த விமான நிலையமாக திகழ்வதாகவும், விரைவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானசேவை அதிகரிக்கவும், சரக்கு கையாளுதலை விரிவுபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இத்தகவல்கள் பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினரிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக கொங்கு குளோபல் போரம் இயக்குநர் சதீஷ் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...