கோவை சர்வா ஹைடெக் சொல்யூஸன் லிமிடெட் நிதி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க அழைப்பு

கோவையில் சர்வா ஹைடெக் சொல்யூஸன் லிமிடெட் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க அழைக்கப்பட்டுள்ளனர். நிறுவனம் அதிக வட்டி வாக்குறுதி அளித்து முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு.


கோவை: கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சர்வா ஹைடெக் சொல்யூஸன் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோவை ஆவாரம்பாளையம் துரைசாமி லே-அவுட் பகுதியைச் சேர்ந்த கேசவன் என்பவர் பொருளாதார குற்றப் பிரிவில் புகார் மனு அளித்துள்ளார். அதில், கோவை உடையாம்பாளையத்தில் உள்ள ஃபிளவர் வேலன்சியா அடுக்குமாடிக் குடியிருப்பில் செயல்பட்டு வந்த சர்வா ஹைடெக் சொல்யூஸன் லிமிடெட் நிறுவனம் மக்களிடம் பெறப்படும் முதலீட்டு தொகைக்கு அதிக வட்டி தருவதாகவும், பல்வேறு திட்டங்கள் வாயிலாக அதிக லாபம் பெறலாம் என்றும் கூறி பலரிடம் முதலீடுகளை பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், நிதி நிறுவனத்தின் மீதும் அதன் இயக்குநர்கள் ரிதுவரணன், ஸ்ரீஹரி, பாலன் நாராயணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

இவ்வழக்கின் இறுதி அறிக்கையை முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், மேற்படி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் கிடைக்கப் பெறாதவர்கள் காலம் தாழ்த்தாமல் கோவை மாநகர காவல் ஆணையர் வளாகத்தில் அமைந்துள்ள பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் தங்களிடம் உள்ள தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...