டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.புரம் மற்றும் வடவள்ளி உழவர் சந்தைகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்

காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பவ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு மாத்திற்கு மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்று டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் வடவள்ளி உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும்  விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல நாட்களாக போராடும் விவசாயிகளை பிரதமர் சந்திக்க மறுப்பதாக குற்றம்சாட்டியவர்கள் விவசாயிகளின் கோரிக்யை உடனடியாக மத்திய அரசுச் நிறைவேற்ற வேண்டும் எனவும் இல்லையென்றால் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். விவசாயிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால, பரபரப்பாக காணப்படும் உழவர் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...