கோவையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோவில் கைது

கோவை வடவள்ளி அருகே உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் நூலக ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.


Coimbatore: கோவை வடவள்ளி அருகே டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் இயங்கும் தனியார் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் நூலக பொறுப்பு ஆசிரியராக பணிபுரியும் பால்ராஜ் என்பவர், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பால்ராஜின் பாலியல் தொல்லை அதிகரித்ததால் மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு சிறுமிகளையும் பள்ளி வளாகத்திற்குள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாநகர காவல் துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆர் எஸ் புரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ், ஆசிரியர் பால்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் முதலில் பள்ளி முதல்வரிடம் தெரிவித்தும், பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் மாவட்ட கல்வி அதிகாரிக்கு புகார் சென்றது. மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பிருந்தா தலைமையிலான குழுவினர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.

மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தின் சார்பில், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நூலக பொறுப்பு ஆசிரியர் பால்ராஜ் கைது செய்யப்பட்டார்.

பாலியல் புகார் தொடர்பாக போலீசாருக்கு முறையாக தகவல் அளிக்காத பள்ளி முதல்வர் மகேஸ்வரி, நிர்வாகி தண்டபாணி ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜூலை 12 அன்று போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...