கோவையில் பட்டியல் இன இளைஞர் கொலை வழக்கில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவையில் 2016ல் நடந்த பட்டியல் இன இளைஞர் கொலை வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து எஸ்.சி எஸ் டி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



Coimbatore: கோவையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பட்டியல் இன இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் 10 பேருக்கு இரட்டை ஆயுள் மற்றும் இருவருக்கு ஆயுள் தண்டணை விதித்து கோவை எஸ்.சி எஸ் டி சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த சோலைராஜன் என்பவரது மகன் தாமரைச்செல்வன் (23) டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி இரவு, சின்ராஜ் நகர் புற்றுகண் மாரியம்மன் கோவில் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த தாமரைச்செல்வன், பிரசாந்த், ஜெகதீஷ் ஆகிய மூவரையும் கார்த்திக், மகேந்திரன் உள்ளிட்ட 14 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. தாமரைச்செல்வனை கொடூரமாக வெட்டி, கல்லை தலையில் போட்டு கொலை செய்தனர்.



இந்த வழக்கில் கோவை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையில், மொத்தம் 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், 14 பேரில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். அதில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டணையும் வழங்கி நீதிபதி விவேகானந்தன் உத்தரவிட்டார். வழக்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது ஜெயசிங் என்பவர் உயிரிழந்த சூழலில், விஜய் என்பவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர்கள் தல விக்கி, தோப்பு மகேந்திரன், டிப்ஸ் கார்த்திக், கவாஸ்கான், டைல் சுரேஷ், பிரகாஷ், நண்டு நவீன், விமல், ஒன்றரை கௌதம், கலைவாணன் ஆகியோர். கிறிஸ்டோபர் மற்றும் கருப்பு கௌதம் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் இருந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி, பின்னர் பலத்த பாதுகாப்புடன் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். குற்றவாளிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டுள்ளதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...