கோனேரிப்பட்டியில் புதிய நியாயவிலைக் கடை கட்டிடம்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்டம் கோனேரிப்பட்டியில் ரூ.8.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடை கட்டிடத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார். பள்ளி மாணவர்களுடன் உரையாடிய அமைச்சர், அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னிவாடி ஊராட்சியில் கோனேரிப்பட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பொது விநியோக நியாயவிலைக் கடை கட்டிடம் இன்று திறக்கப்பட்டது.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-2022-ன் கீழ் சுமார் ரூ.8.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த புதிய நியாயவிலைக் கடை கட்டிடத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.



அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர், அங்குள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து, கோனேரிப்பட்டியில் உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்ற அமைச்சர், அங்கு படிக்கும் மாணவர்களிடம் அவர்களின் படிப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர், மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் கோவிந்தசாமி, வட்ட வழங்கல் அலுவலர் செந்தில் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார்..!

கோவை தெற்கு தொகுதியில் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றியைப் பெறப் போகிறார்; அந்த பயத்தில் தான் செந்தில் பாலாஜி தரம்...

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார் - அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில், திமுக அமைச்சர் செ...

“தி.மு.க தோற்றால் கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்” – கோவையில் அண்ணாமலை..!

கோவை வடக்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற அண்ணாமலை, தி.மு.க மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார...

சாரட் குதிரை வண்டியில் பிரசாரம்: சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் சாரட் குதிரை வண்டியில் பாப்பநாயக...

திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் 34, 35 வது வார்டுகளில் நேற்று தீவிர வாக்கு சேகரி...

Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில் மாணவிகள் முகவர்ணம் ப...