கோவையில் காதலித்து ஏமாற்றிய இளைஞர் மீது இளம்பெண் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவை செல்வபுரத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண், 6 ஆண்டுகளாக காதலித்த இளைஞர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியரை நாடியுள்ளார்.


கோவை: கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சினேகா, அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். விக்னேஷ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை சினேகாவுடன் தனிமையில் இருந்துள்ளார். ஆனால் பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியுள்ளார்.

இது தொடர்பாக சினேகா போத்தனூர் மகளிர் காவல் நிலையத்திலும், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், ஜூலை 16 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

சினேகா கூறுகையில், புகார் அளித்தால் தன்னையும் தனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாக விக்னேஷ் மிரட்டி வருவதாகவும், விக்னேஷ் திமுகவைச் சேர்ந்தவர் என்பதால் காவல் நிலையத்தில் புகாரை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், விக்னேஷுடன் நெருக்கமாக பழகியதில் தனக்கு குழந்தை உண்டாகி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருந்ததாகவும், அப்போது விக்னேஷின் பெற்றோர் கர்ப்பத்தை கலைத்து விட்டால் திருமணம் செய்து வைப்பதாக கூறியதாகவும் தெரிவித்தார். ஆனால் கர்ப்பத்தை கலைத்த பிறகு திருமணத்திற்கு மறுத்து விட்டனர் என்றும் கூறினார்.

விக்னேஷ் தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை தொடர்ந்து உடலுறவுக்கு அழைத்து மிரட்டுவதாகவும் சினேகா குற்றம்சாட்டினார். மேலும், தாங்கள் காதலித்த போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் தனிமையில் இருந்த போது எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.

தன்னை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்த விக்னேஷ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினேகா கேட்டுக்கொண்டார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...