நீலகிரி மாவட்டம் குன்னூர் வி.பி.தெருவில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க-வின் குன்னூர் நகரத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன், மாநில பொருளாதார பிரிவு செயலாளர் எஸ்.எஸ்.வி.கிருஷ்ணக்குமார், நகர பொதுச் செயலாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் ஹேன்குமார் வரவேற்புரை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, கடந்த வாரம் திருப்பூரில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணை தாக்கியதைக் கண்டித்தும், திருப்பூர் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.