கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், 6-வது வார்டுக்குட்பட்ட டி.வி.எஸ்.நகர் மற்றும் காமராஜர் நகர் பகுதியில் மனித கழிவுகள் மற்றும் சமயற்கழிவுகளைக் கொண்டு உயிரி எரிவாயுக் கூடம் அமைக்கப்பட்டுள்ள இடத்தையும், காயத்திரி கார்டன் பகுதியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சிப் பூங்காவினையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றும் பணியினையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியினையும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், பொதுமக்களிடம் தங்கள் வீடுகளில் தேவையற்ற பொருட்களை அகற்றும்படியும், தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் ஏற்படாத வண்ணம் சுகாதாரமாக வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

பின், என்.ஜி.ராமசாமி லே அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வுகளின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் ராமைய்யா, மாநகராட்சிப் பொறியாளர்களை மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.