பல்லடம் அருகே அடிப்படை வசதிகளுக்காக பொதுமக்கள் சாலை மறியல்: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வண்ணாந்துறை புதூரில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் காங்கேயம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள நாச்சிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணாந்துறை புதூர் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெரு விளக்கு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை மனு அளித்துள்ளனர்.

கிராம சபை கூட்டங்களிலும் இது தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை எந்த அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இன்று காலை பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து 50-க்கும் மேற்பட்டோர் காங்கேயம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் விஜிகுமார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி நிர்வாகத்திடம் பேசுவதாக உறுதியளித்தார். இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் காங்கேயம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...