கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் வார்டு எண்களான 94, 95, 96, 97, 98, 99 மற்றும் 100க்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார்கள் பொருத்தி குடிநீர் எடுக்கப்படும் மின்மோட்டார் பறிமுதல் செய்து, குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்களான 94, 95, 96, 97, 98, 99 மற்றும் 100க்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் போது வீட்டுக் குடிநீர் இணைப்புதாரர்கள் தங்களது குடிநீர் இணைப்புகளில் நேரடியாக மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சி எடுத்து வருகின்றனர்.
மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுக்க வேண்டாம் என இணைப்புதாரர்களிடம் பலமுறை நேரில் எச்சரித்தும் தொடர்ந்து மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சி எடுத்து வருகின்றனர்.
எனவே குடிநீர் இணைப்புகளில் நேரடியாக மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சி எடுத்தால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு, மாநகராட்சி சட்ட விதிகளுக்குட்பட்டு குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்.
எனவே, பொது மக்கள் குடிநீர் குழாய் இணைப்புகளில் நேரடியாக மின்மோட்டார் பொருத்தாதவாறு போதுமான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.