கோவையில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே அர்ஜுனன், கேஆர் ஜெயராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவையின் முக்கிய பகுதிகளில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே அர்ஜுனன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கேஆர் ஜெயராமன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கருப்புநிற ஆடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள், மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலைக் கடைகளில் பொருட்கள் முறையாக வழங்கப்படாததை கண்டித்தும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஆளும் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன், "இன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்சாரக் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மின் கட்டண உயர்வு, சாமானியர்கள் முதல் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் வரை அனைவருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது," என்றார்.
மேலும் அவர், "தீபாவளிக்கு போனஸ் அறிவிப்பது போல, திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில், மூன்று முறை மின் கட்டண உயர்வை போனஸாக அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலின் போது ஏன் இந்த மின்சார கட்டண உயர்வு வெளியாகவில்லை? தமிழகத்தில் அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளது. 20,000 ரூபாய் இருந்தால் மட்டுமே பாமர மக்களால் வாழ்க்கை நடத்த முடியும் என்ற சூழலை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது," என்று குற்றம்சாட்டினார்.
போக்குவரத்து துறை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "வெளிமாவட்டங்களில் இருந்து கோவைக்கு வருபவர்கள், உரிய பகுதிகளை பார்த்து பயணிக்க முடியாத வகையில், நகர பேருந்துகளில் விளம்பரங்கள் காணப்படுகின்றன. இருந்தும் அமைச்சர் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்கிறார். இன்னும் பத்து நாட்களில் போக்குவரத்து கட்டணத்தையும் உயர்த்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார்.
நியாயவிலைக் கடைகள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். "கடந்த மூன்று மாதங்களாக நியாயவிலைக் கடைகளில் பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை எனத் தெரியவருகிறது," என்றார்.
முடிவில், "2006 காலகட்டத்தில் இதே சூழல் நிலவியது, அதன் பின்னர் அம்மா ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியது. அப்போது அத்தனை தொழிலதிபர்களும் தமிழ்நாட்டை நோக்கி வந்தார்கள். ஆனால் தற்பொழுது தமிழகத்தில் இருக்கும் தொழிலதிபர்கள் வேறு மாநிலத்திற்கு செல்ல தயாராகி விட்டனர். மின்சார கட்டணமே இந்த நிலைக்குக் காரணம்," என்று அவர் குறிப்பிட்டார்.