மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயரும் அபாயம்: எஸ்.பி. வேலுமணி எச்சரிக்கை

கோவையில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயரும் அபாயம் உள்ளதாக தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி எச்சரித்துள்ளார்.



Coimbatore:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள திருவள்ளுவர் திடலில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், நியாய விலைக் கடைகளில் பாமாயில், பருப்பு போன்ற பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி, "அதிமுக ஆட்சியில் கொரோனா காலகட்டத்திலும், வருவாய் இழப்பு ஏற்பட்ட நிலையிலும் மின் கட்டணம், சொத்து வரி உயர்த்தப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் தொடர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது," என்று குற்றம்சாட்டினார்.

மேலும் அவர், "கோவை மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மின் கட்டண உயர்வால் வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

நியாய விலைக் கடைகள் குறித்தும் எஸ்.பி. வேலுமணி கருத்து தெரிவித்தார். "நியாய விலைக் கடைகளில் பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தரமில்லாமல் குறைத்து வழங்கப்படுகின்றன. அனைத்து பொருட்களும் முழுமையாக வழங்கப்பட வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...