கோவையில் போக்குவரத்து மாற்றம்: மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, 100 அடி சாலையில் இருந்து சிவானந்தா காலனி செல்லும் வழியில் மாற்றம் செய்ய உத்தேசம். மக்கள் கருத்து தெரிவிக்க காவல்துறை அழைப்பு.


கோவை: கோவை மாநகர காவல்துறை இன்று (ஜூலை 23) வெளியிட்டுள்ள அறிக்கையில், நகரில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, 100 அடி சாலையில் இருந்து சிவானந்தா காலனி செல்லும் வாகனங்களுக்கான புதிய வழித்தடம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடம் பின்வருமாறு: காந்திபுரம் 100 அடி ரோடு ஷீலா மருத்துவமனை சந்திப்பில் இருந்து இடது பக்கம் திரும்பி, கொங்குநாடு மருத்துவமனை, கிராஸ்கட் ரோடு, வடகோவை மேம்பாலத்தின் வலது பக்கம் சர்வீஸ் ரோட்டில் திரும்பி பவர்ஹவுஸ் வழியாக சிவானந்தா காலனி மற்றும் 100 அடி ரோட்டிற்கு செல்லலாம். இந்த சாலையை ஒருவழிப் பாதையாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. மக்கள் தங்கள் கருத்துக்களை ஜூலை 31, 2024க்கு முன்பாக, 0422-2212567 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்கலாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், அவினாசி சாலையில் நடைபெற்று வரும் உயர்மட்ட பாலப் பணிகள் காரணமாகவும், இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் பொதுமக்கள் சிரமப்படுவதாக காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, ஆம்னி பேருந்து பயணிகள் ஏற்றும் இடங்களாக காந்திபுரம் மற்றும் டைடல் பார்க் ஆகிய இரண்டு இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து பேருந்துகளில் ஏற வேண்டும் என்றும், தாமதமாக வரும் பயணிகளுக்காக பேருந்துகளை நிறுத்தி வைக்க முடியாது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆம்னி பேருந்துகள் அதிக நேரம் சாலையில் நிறுத்தி வைக்கப்படுவது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...