காஷ்மீருக்கு கடத்தப்பட்ட 17 வயது சிறுமி மீட்பு: போக்சோ சட்டத்தில் கோவை இளைஞர் கைது

கோவையில் 17 வயது சிறுமி காணாமல் போனார். காவல்துறை விசாரணையில், சிறுமி காஷ்மீரில் இருப்பது கண்டறியப்பட்டது. முகமது அயாஸ் என்ற இளைஞர் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார்.


Coimbatore: கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் துணிக் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த ஜூலை 13 ஆம் தேதி வழக்கம் போல வேலைக்குச் சென்று திரும்பி வீடு திரும்பவில்லை. சிறுமியை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், அச்சிறுமியின் பெற்றோர் பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பேரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் சிறுமி இதற்கு முன்னர் வேலை செய்த துணிக் கடையின் உரிமையாளரின் மகனான முகமது அயாஸ் என்பவர் சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்ததும், சிறுமி காணாமல் போனதில் இருந்து முகமது அயாசும் காணாமல் போனது தெரியவந்தது.

முகமது அயாஸை காணவில்லை என அவரின் பெற்றோர் கரும்புக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், அந்த வாலிபரும், சிறுமியும் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் அறை எடுத்து தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காஷ்மீர் காவல் துறையினர் பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் காஷ்மீர் காவல் துறையினர் இருவரையும் பிடித்தனர்.

பின்னர் இது குறித்து காஷ்மீர் காவல் துறையினர் கோவை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் காஷ்மீர் சென்று வாலிபரையும், சிறுமியையும் மீட்டு விமானம் வாயிலாக கோவைக்கு அழைத்து வந்தனர்.

காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் முகமது அயாஸ் சிறுமியை காதலிப்பதாக கூறி ஓராண்டாக பழகி வந்ததும், தனக்கு தன் வீட்டில் திருமணத்திற்கு பெண் பார்ப்பதாகவும், அதனால் வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியதும் தெரியவந்தது.

மேலும் முகமது அயாஸ் கடந்த ஜூலை 13 ஆம் தேதி சிறுமியை அழைத்துக் கொண்டு காஷ்மீர் சென்று, அங்கு அறை எடுத்து தங்கிய சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கடத்தல், போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, முகமது அயாஸ் என்பவரை ஜூலை 25 ஆம் தேதி கைது செய்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...