மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஒத்துழைப்பு அவசியம் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் திறப்பு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தினார்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் அமெரிக்கா இந்திய பவுண்டேஷன் சார்பில் ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் திறப்பு விழா நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்தனர்.



நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ், "சமுதாயத்தில் என்ன கற்றுக் கொண்டோமோ அதை திருப்பி சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டும் என்பது நமது கடமை. நாம் படித்தோம், நாம் சம்பாதித்தோம், நன்றாக இருக்கிறோம் என்று என்னாமல், இந்த சமுதாயத்திற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை நினைக்கும் மாணவர்களாக உருவாக வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

மேலும் அவர், "பாடம் நடத்திக் கொண்டே இருந்தால் சலிப்பு ஏற்படும். இதனால் கற்றல் திறனை, செயல் திறனை அதிகரிக்க வேண்டும். அதற்கு மாணவர்களின் முழு ஒத்துழைப்பு தேவை. கற்றல் திறன் அதிகரித்தால் தேர்வு எழுதும் போது உதவியாக இருக்கும். பள்ளிக்கூடம் என்பது உங்கள் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளும் இடமாக இருக்க வேண்டும்," என்று கூறினார்.



இந்த விழாவில் கிணத்துக்கடவு பேருராட்சி தலைவர் கதிர்வேல், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜன், கிணத்துக்கடவு நகர திமுக செயலாளர் கனகராஜ், பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...