பொள்ளாச்சியில் மத்திய பட்ஜெட் எதிர்ப்பு: காதில் பூ அணிந்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் நூதன போராட்டம்

பொள்ளாச்சியில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்ததை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காதில் பூ அணிந்து நூதன முறையில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத்தினர்.


கோவை: பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்ததை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் பல்வேறு அரசியல், சமூக இயக்கங்கள் சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.



தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பங்கேற்பாளர்கள் நாமம் போட்ட பதாகைகளை ஏந்தியவாறும், காதில் பூவை சுற்றிக் கொண்டும் நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்தனர்.



போராட்டக்காரர்கள் "தமிழ்நாட்டுக்கு கோவிந்தா, பாஜகவுக்கு கோவிந்தா, தமிழ்நாடு திட்டங்களுக்கு கோவிந்தா" என்ற கோஷங்களை எழுப்பினர்.



இந்த நூதன எதிர்ப்பு போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...