தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில்  62வது ரயில்வே வார விழா 



தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் நேற்று  (21.04.2017) 62வது ரயில்வே வார விழா சேலம்கோட்ட அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்டது. 1853ம் ஆண்டில் இந்தியாவில் ரயில் சேவை முதன் முறையாக துவங்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் இவ்விழா நாடெங்கிலும் இந்திய ரயில்வேயால் கொண்டாடப்படுகிறது.



விழாவில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. ஹரிசங்கர் வர்மா அவர்கள் சிறப்பாகபராமரிக்கப்பட்ட ரயில்நிலையங்கள் மற்றும் பாதுகாப்பான ரயில் தடப்பகுதி போன்றவற்றிற்காக 14 சுழற்கேடயங்களை சம்பந்தப்பட்ட ரயில்நிலைய மேலாளர்களுக்கு வழங்கினார். சிறப்பாக பராமரிக்கப்பட்ட பெரிய ரயில்நிலையத்திற்கான கேடயத்தை கோயம்புத்தூர் ரயில் நிலைய மேலாளர் திரு.சின்னராஜ் அவர்களும், சிறப்பாக பராமரிக்கப்பட்ட சிறிய ரயில்நிலையத்திற்கான கேடயத்தை விருத்தாசலம் அடுத்துள்ள புக்கிரவாரி ரயில்நிலைய மேலாளர் திரு. ராஜசேகர் அவர்களும். திரு ஹரிசங்கர் வர்மா அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர். இது தவிர 20அதிகாரிகள் உள்பட 402 சேலம் கோட்ட ஊழியர்களுக்கு திரு. ஹரிசங்கர் வர்மாஅவர்கள் கடந்த ஆண்டில் சிறப்பாக பணியாற்றியமைக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகளை சேலம் கோட்ட தெற்குரயில்வே மகளிர் நல அமைப்பின் தலைவி திருமதி அனிதா வர்மா அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.



ரயில்களில் பாதுகாப்பு தேவைப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எங்கிருந்தாலும் தொடர்பு கொண்டு உதவிசெய்ய வசதியாக அதிநவீன மொபைல் போன் ஒன்றை சேலம் கோட்ட தெற்கு ரயில்வே மகளிர்நல அமைப்பின் தலைவி திருமதி அனிதாவர்மா அவர்கள் ரயில்வே பாதுகாப்புப் படைக்கு வழங்கினார், அதை ரயில்வே பாதுகாப்புப் படைகோட்ட ஆணையர் திரு பி, ராஜ்மோகன் அவர்களும் சேலம் தலைமைக் காவலர் திருமதி. சுதா அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

விழாவின் போது சேலம் கோட்டத்திற்கு அதிக அளவில் சரக்குகள் புக்கிங் செய்து வரும் நிறுவனங்களான இந்தியா சிமெண்ட்ஸ், செட்டிநாடு சிமெண்ட்ஸ். ஜிண்டால் ஸ்டீல், சேலம் ஸ்டீல் மற்றும் சீனிவாசா ரோட்வேஸ் பிரதிநிதிகளை திரு வர்மா பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

 

விழாவில் பேசுகையில் திரு. ஹரிசங்கர் வர்மா சேலம் கோட்டம் கடந்த நிதியாண்டில், சிறப்பாகபணியாற்றி மேம்பாடு கண்டிருப்பதாக தெரிவித்தார். மொத்த வருவாய் கடந்த ஆண்டை விட 4.9 சதவீதம் அதிகரித்து 635.7 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகவும், பயணிகள் வருவாய் ரூ.477.18 கோடியில் இருந்து ரூ.511.23 கோடியாக 7.14 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், பயணச்சீட்டு சோதனை வருவாய் ரூ.4.97 கோடியில் இருந்து ரூ.6,18 கோடியாக 24.55 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், உணவக வருவாய் ரூ.2.79 கோடியில் இருந்து ரூ.3.14 கோடியாக 12.72 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

கோயம்புத்தூர், ஊட்டி, மற்றும் குன்னூர் ரயில்நிலையங்களில் வைபை வசதி செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் சேலம் ரயில்நிலையத்தில் வைபை வசதி செய்யப்படும் என்றும் தெரிவித்த அவர், சேலம், திருப்பூர்,கோயம்புத்தூர் ரயில்நிலையங்களில் குளிர்வசதி செய்யப்பட்ட காத்திருப்பு அறைகள், சேலத்தில் எஸ்கலேட்டர் வசதி, கோயம்புத்தூரில் மகளிர் உதவி மையம், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் போன்ற ரயில்நிலையங்களில் குழந்தைகளுக்கானஉணவு விற்பனைக்கான ஜனனி சேவா கடைகள், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட வசதியாக கோயம்புத்தூர், ஈரோடு,சேலம், ரயில்நிலையங்களில் தனி அறைகள், பணப்பரிவர்த்தனையை குறைக்க பெரும்பாலான ரயில்நிலையங்களில் கிரடிட்கார்டு மற்றும் டெபிட் கார்டு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் சொன்னார்.

தெற்கு ரயில்வே கோட்டங்களில் சேலம் கோட்டம் சமூக வலைதளங்களில் பயணிகள்குறைதீர்ப்பில் விரைந்து செயல்பட்டு அதாவது12 நிமிடங்களில் குறை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது குறித்து ரயில்வே வாரியம் பாராட்டு தெரிவித்துள்ளதாக தெரிவித்தார். இந்திய ரயில்வேயின் பசுமை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கோவை மாயவரம் ஜனசதாப்தி விரைவு ரயிலில் சூரியமின்சக்தி பலகைகள் நிறுவப்பட்டு தற்போது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகதெரிவித்தார் 

ஊழியர்களின் குறை தீர்க்க அங்கீகரிக்கப்பட்டஅமைப்பான தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பிரதிநிதிகளுடன் 36 மணி நேரம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட 583 குறைகள் ஒரே நாளில் தீர்க்கப்பட்டதாகவும், ரயில்வே குடியிருப்பில்  ஊழியர்களுக்காக புதிய குடியிருப்புகள், மற்றும் திறந்த வெளி விளையாட்டரங்கம் சேலத்தில் கட்டப்பட இருப்பதாகவும் சொன்னார். 

தெற்கு ரயில்வே தலைமையக ரயில்வே வாரவிழாவில் சேலம் கோட்ட பொறியியல், வணிகவியல் மற்றும் பொருள் வாங்கும் பிரிவுகள் சிறப்பாக பணியாற்றியமைக்கான சுழற்கேடயம் பெற சிறப்பாக பணியாற்றிய சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அவர் பாராட்டினார்.

விழாவில் சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவர்கள் குடும்பத்தினருடன் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர். வந்திருந்தோரை மகிழ்விக்க ஊழியர்களின் கலை நிகழ்ச்சிசகள் நடைபெற்றன. முன்னதாக சேலம் கோட்டரயில்வே கூடுதல் மேலாளர் திரு. சந்திரபால் அவர்கள் வந்திருந்தோரை வரவேற்றார். சேலம் கோட்ட  பணியாளர் நல அலுவலர் திரு.எஸ்.திருமுருகன் நன்றியுரை வழங்கினார்..

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...