கோவை சிறைச்சாலை காவலர் அணிவகுப்பு மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி நாளை (ஏப்ரல் 23) மாலை 5 மணிக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைக்கிறார்.
நாளை தொடங்கும் இப்பொருட்காட்சியானது தொடர்ந்து 45 நாட்கள் நடைபெற உள்ளது. இவ்விழாவின் துவக்க நாளன்று அமைச்சர்கள் பங்கேற்று, மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்கள். மேலும் இதில், தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகிக்கவுள்ளனர்.
செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன் நன்றியுரையாற்ற உள்ளார். இவ்விழாவிற்கு கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இந்த பொருட்காட்சி ஒவ்வொரு நாளும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக சிறப்பு பேருந்து வசதிகள் மற்றும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட 27 துறைகளின் சார்பாக அரங்குகளும், அரசு சார்பு நிறுவனங்களுக்கான தமிழ்நாடு உப்புக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், ரிசர்வ் வங்கி, ஆவின், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆகியவற்றின் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தனியார் அரங்குகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெறவுள்ளன. தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த பொருட்காட்சி தொடக்கவிழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறும், பொதுமக்கள் அனைவரும் இப்பொருட்காட்சியை பார்வையிட்டு பயன்பெறுமாறும் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.