கோவை மயிலேறிபாளையம் அருகே வழக்கறிஞர் உதயகுமார் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Coimbatore: கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயது வழக்கறிஞர் உதயகுமார், இன்று (ஆகஸ்ட் 2) பொள்ளாச்சி செல்லும் வழியில் படுகொலை செய்யப்பட்டார்.
வழக்கு ஒன்று தொடர்பாக பொள்ளாச்சி செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு மதியம் கிளம்பிய உதயகுமார், தனது காரில் மேலும் சிலருடன் பயணித்ததாக தெரிகிறது. மயிலேறிபாளையம் பிரிவு அருகே வந்தபோது, நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் அந்த கார் சென்றுள்ளது.
சிறிது தூரத்தில் காரில் இருந்தவர்கள் உதயகுமாரை வெளியே இறக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். பலத்த காயமடைந்த உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குற்றவாளிகள் உதயகுமாரின் காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் சூலூர் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். உதயகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை கைது செய்வதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.