தாராபுரத்தில் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினம் அனுசரிப்பு

தாராபுரம் முகாம் அலுவலகத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அமைச்சரும் கட்சி நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கினார்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தீரன் சின்னமலையின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.



இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றியக்குழு பெருந்தலைவருமான S.V. செந்தில்குமார், தாராபுரம் நகர திமுக செயலாளர் சு. முருகானந்தம், தாராபுரம் நகர மன்ற தலைவர் கு. பாப்புக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், நகர்மன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், இந்நாள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் வார்டு திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...