கட்டிட தொழிலாலர்களுக்கு வழங்கப்படும் நலதிட்டங்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரி அமல்படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கங்கள் சார்பில் கட்டிட தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டிட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலதிட்டங்கள் ஒரே மாதிரி கிடைக்க சட்டம் அமலாக்கப்பட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். தலைநகர் தில்லியில் கட்டிட தொழிலாளர்களின் குழந்தைகளின் முழு கல்வி செலவினங்களையும் அரசு ஏற்று செயல்படுத்தி வருவது போல மற்ற மாநில அரசுகளும் அமல்படுத்த வேண்டும். 2011ம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த ஓய்வூதிய அரசாணையை நிறைவேற்ற வேண்டும். அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் 100-கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.