தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி மர்மநபர்களால் கொவை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. ஜெயலலிதா அவ்வப்போது ஓய்வு எடுக்க இந்த எஸ்டேட் வருவது வழக்கம். அவரது மறைவுக்கு பிறகு கொடநாடு எஸ்டேட்டை காவலாளிகள் மட்டுமே கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் நள்ளிரவில் கொலை செய்யப்பட்டார். மற்றோரு காவலாளியான கிஷன் பகதூரும் படுகாயம் அடைந்தார். காவலாளிகள் இருவரும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள்.
நள்ளிரவில் காரில் வந்த மர்ம நபர்கள் பகதூரை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், கிஷன் பகதூரை கட்டிப் போட்டுவிட்டுச் சென்றதாகவும் கொடநாடு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதாவன் மறைவுக்குப் பின்பு அதிமுக-வில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகின்றன. மேலும், இந்த கொடநாடு எஸ்டேட்டையும் சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு தினகரன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை, கொள்ளை முயற்சியின் போது நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என டிஐஜி தீபக் எம். தாமர் தலைமையில் 5 டிஎஸ்பி கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.