தில்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தொடர்ந்து தமிழகத்தையும், விவசாயிகளையும் வஞ்சித்து வரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று முழுஅடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், இன்று அரசியல் கட்சியினர் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக வால்பாறையில் அனைத்துக்கட்சியினர் சார்பில் காந்தி சிலை முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினர் சுமார் 30-க்கும் மேட்பட்டோரை கைது செய்தனர்.