பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி கோவை- சென்னை சைக்கிள் பயணம் செய்த 11-ம் வகுப்பு மாணவர்

மண் வளம், நீர் வளம் மற்றும் மனிதர்களை பாதிக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று சூழலியல் ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வரும் மே மாதம் முதல் இந்த உத்தரவு நடைமுறை படுத்தப்படும் என்றும், தடையை மீறி பிளாஸ்டிக் பைகள் உபயோக்கிக்கும் வியாபார நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்  என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இந்த நிலையில், பிளாஸ்டிக் பைகள் மட்டுமல்லாது பிளாஸ்டிக் பாட்டில்களையும், பிளாஸ்டிக்கால் ஆன உறிஞ்சு குழல்களையும் தடை செய்ய வேண்டும் என்ற கருத்தோடு, மக்களிடையே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் இருந்து சென்னை வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார் கோவை சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் சஞ்ஜய் பிரசாத்.

தனது இந்த பயணத்தின் போது கிராமங்களுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று பிளாஸ்டிக் ஒழிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திய இவர் தொடர்ந்து இதுபோன்ற பயணங்களை மேற்கொள்ள இருப்பதாக துடிப்புடன் தெரிவிக்கிறார்.

இந்த விழிப்புணர்வு பயணம் குறித்து சஞ்ஜய் பிரசாத் கூறியதாவது:-

நான் கோவை சர்வஜனா பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறேன். எனது தந்தை கோபால்சாமி, சைக்கிள் பந்தய வீரர். அதன் காரணமாகவே எனக்கு சைக்கிள் மீதான ஆர்வம் வந்ததாக நினைக்கிறேன். சிறு வயது முதல் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வரும் நான், ‘ஒன் டே சேலஞ்ச்’ என்ற எனக்கான விதி ஒன்றை ஒருவாக்கிக் கொண்டேன். எனது பயிற்சியாளர் ஃபெட்ரிக் வழிகாட்டுதளின் படி ஒரு நாளில் 8 மணி நேரத்தில் 100 முதல் 180 கிமீ வரை சென்று வந்தேன்.

சாதாரணமாக சைக்கிள் பயணம் மேற்கொள்வதை விட, ஒரு கருத்தை முன்னிறுத்தி அக்கருத்தை மக்களுக்கு வலியுறுத்தும் வகையில் சைக்கில் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தேன். அதன்படி கடந்த 9-ம் தேதி கோவையில் இருந்து புறப்பட்டு, சேலம் விழுப்புரம் வழியாக 4 நாள் பயணமாக சென்னையை அடைந்தேன். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் சைக்கிள் பயணம் இருந்தது.



செல்லும் வழியில், பல கிராமங்களுக்கு சென்று அங்கு மக்களிடம் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் மற்றும் ‘ஸ்ட்ரா’ குறித்தும் அதன் பாதிப்புகள் குறித்தும் விளக்கினேன். பிளாஸ்டிக் பைகள் மட்டுமல்ல, பிளாஸ்டிக்கால் ஆன பாட்டில்களும், உறிஞ்சு குழல்களும் தடை செய்யப்பட வேண்டியவை.

இந்திய இருப்புப்பாதை ஓரங்களில் ஒரு நாளைக்கு 2 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. அதோடு, நம் தேசிய நெடுஞ்சாலைகளில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு நாளைக்கு 100 பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுக்கப்படுகிறது. இந்த தகவலை எனது பயணம் மூலமும், சாலையோரங்களில் குப்பை எடுக்கும் தொழிலாளிகளிடமும் கேட்டு அறிந்து கொண்டேன்.

சென்னைக்கு செல்லும் முன்னதாக எனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் எனது பயணம் குறித்து அறிவித்திருந்தேன். அதைபார்த்த மக்கள் நான் செல்லும் வழியெங்கும் எனக்கு ஆதரவு கொடுத்தனர்.



பல தன்னார்வலர்கள் என்னை ஊக்கப்படுத்தினர். வழியில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுடன் உரையாடினேன். அப்போது, பிளாஸ்டிக் ஒழிப்பது குறித்த விழிப்புணர்வை முன்னெடுப்பதாக அனைவரும் எனக்கு நம்பிக்கை தெரிவித்தனர்.



எனது இந்த பயணத்தை அறிந்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் என்னை அழைத்து பயண விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பிளாஸ்டிக் ஒழிப்பிற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து, வரும் மே மாதம் கோவையிலிருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.

எனது இந்த முயற்சி ஒருவரது மனதில் மாற்றத்தை கொண்டுவந்தாலும் அது என்னை ஊக்குவிக்கும், வழி நடத்தும்" இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...