கோவையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் கழகத்தின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவை அன்னூர் பகுதியில் உள்ள காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் 78-வது சுதந்திர தின விழா, மரம் நடுவிழா, கல்வி கொடை வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றன.


கோவை: அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் 78-வது சுதந்திர தின விழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கோவை அன்னூர் பகுதியில் உள்ள காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இந்த விழா நடைபெற்றது. சுதந்திர தின விழா, மரம் நடுவிழா, பள்ளி மாணவர்களுக்கு கல்வி கொடை வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக இது கொண்டாடப்பட்டது.

இவ்வமைப்பின் நிறுவனத்தலைவர் ஆர்.கே.குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பொதுச்செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், மாநில மகளிரணி தலைவி தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜுனன், டாக்டர் சி.ராதகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகர் தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அதன் பின்னர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி கொடை வழங்கியதுடன், மரம் நடு விழாவையும் துவக்கி வைத்தார். மேலும், பள்ளியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகசுந்திரம் தொடக்க உரையாற்றினார். துணை தலைவர் செந்தில்குமார், இணை செயலாளர் ஜான்கிருஸ்டோபர், விஜய் ராவ், டிரவல்ஸ் ரமேஷ், ராமஜெயம், சந்திரசேகர், செயற்குழு உறுப்பினர் அப்பு, விக்னேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.



சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி தலைவர் காயத்திரி பாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர் எம்.கே.துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், கவுன்சிலர் ரோஜபாலு, சுமதிராஜேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...