தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு தற்காலிகமாக தற்போது தமிழகம் திரும்பியுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில், பல்வேறு அரசியல் கட்சியினர், வணிகர் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், லாரி, ஆட்டோ, தனியார் பேருந்து உள்ளிட்டு அனைத்துத் தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.

மேலும், தமிழகத்தில் ஆங்காங்கே அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல், ரயிவே நிலையம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது. இதில், திமுக, கம்யூனிஸ்ட், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கைதாகினர்.
கோவை மாவட்டத்தைப் பொருத்தவரையில் பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகள் உட்பட 1283 பேர் கைது செய்யப்பட்டள்ளனர். அதில் 35 பெண்கள். மற்றும் கோவை மாநகர அளவில் 17 இடங்களில் பேராட்டங்களில் ஈடுபட்ட 27 பெண்கள் உட்பட 879 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.