தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பார்த்தீனியம் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம்கள்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டது. விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.


கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பார்த்தீனியம் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றன. ஒன்றிய அரசின் களை ஆராய்ச்சி இயக்குநகரத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த களை மேலாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது.



இந்த ஆண்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் களை மேலாண்மை பிரிவு விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்தியது. முகாம்களின் தொடக்க நிகழ்வாக, பல்கலைக்கழகத்தின் கிழக்கு மற்றும் மத்தியப் பண்ணைகளில் பணிபுரியும் அனைத்து பண்ணைத் தொழிலாளர்களுக்கும் பார்த்தீனியம் களை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் உழவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ப. பரசுராமன் முன்னிலை வகித்து பார்த்தீனியம் மேலாண்மை குறித்து சிறப்புரையாற்றினார். விழிப்புணர்வு முகாம்களில் பார்த்தீனியம் களைச் செடி, அதன் நச்சுத் தன்மையால் ஏற்படும் பாதிப்புகள், மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் உழவியல், இரசாயன மற்றும் உயிரியல் முறைகள் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டன.



மேலும், பார்த்தீனியச் செடிகளை பூக்கும் முன் பிடுங்கி உரமாக்குதல் பற்றிய செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 16 முதல் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட முகாம்களில் பேராசிரியர் மற்றும் களை மேலாண்மை பிரிவின் முதன்மை விஞ்ஞானி முனைவர் செ. ராதாமணி, இணைப்பேராசிரியர் முனைவர் ச.பாரதி ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்தினர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...