புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் இரண்டாவது நாளாக இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவையிலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் துறை உள்ளிட்ட 64 துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், நேற்று (ஏப்ரல் 25) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.