‘டபுள் டக்கர்-ஏசி, வைபை, டி.வி வசதியுடன் "உதய் எக்ஸ்பிரஸ்" ரயில் டெல்லி- லக்னோ தடத்தில் முதலில் இயக்கம்

இரவு நேரப் பயணத்துக்காக சிறப்பு இரட்டை அடுக்கு (டபுள் டக்கர்) குளிர்சாதன வசதி கொண்ட ‘உதய்’ ரயிலை ஜூலை மாதம் அறிமுகம் செய்ய ரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது. மக்கள் அதிகமாக பயணிக்கும் வழித்தடங்களான டெல்லி- லக்னோ தடத்தில் இந்த ரயில் முதல்கட்டமாக இயக்கப்படும் எனத் தெரிகிறது.

‘உத்கிரிஷ்சித் டபுள் டக்கர் ஏ.சி. யாத்ரி எக்ஸ்பிரஸ்’ என்ற சொல்லின் சுருக்கமே ‘உதய்’ எக்ஸ்பிரஸ் ஆகும். இந்த ரயிலில் படுக்கை வசதிகள் கிடையாது. பயணிகள் வசதியாக அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் சொகுசு இருக்கைகள் இருக்கும். ஒரு பெட்டியில் 120 பயணிகள் அமரலாம். தானியங்கி உணவு வழங்கும் எந்திரங்கள் மூலம் பயணிகள் உணவுகளையும், காபி, தேநீர், குளிர்பானங்களையும் வாங்கி பருகலாம். 

இது குறித்து ரயில்வேத் துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், “ உதய் எக்ஸ்பிரஸ் ரயில் முதலில் அதிக மக்கள் பயணிக்கும் வழித்தடமான டெல்லி- லக்னோ தடத்தில் இயக்கப்படும். இதற்குக் கட்டணம் 3 அடுக்கு ஏ.சி. கட்டணத்தைக் காட்டிலும் குறைவாக இருக்கும்.

அதே சமயம், பயணிகளுக்கு அதிகமான, சிறந்த வசதிகள் செய்யப்பட்டு இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும், பயணிகளுக்கு எல்.சி.டி. திரை, பயணிகள் கேட்க வைபை ஸ்பீக்கர்கள், வைபை வசதி போன்றவைகள் இருக்கும். படுக்கை வசதிகள் இல்லாத இந்த இரண்டு அடுக்கு ரயிலில் இரவு நேரத்தில் இயக்கப்படும். பயணிகளுக்கு படுக்கை வசதி இல்லாத போதிலும், வசதியாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதியாக காலை நீட்டிக் கொள்ளும் வகையில் இட வசதி, நவீன வடிவமைப்பில் வண்ணமயமான பெட்டிகள், பயோ- கழிப்பறைகள் கொண்டதா இருக்கும். மணிக்கு 110 கி.மீ வேகத்தில் இந்த ரயில் செல்லும்’’ எனத் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...