கோயம்புத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசனில் 10ம் ஆண்டு விழா கூட்டம்

கோயம்புத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசனில் 10ம் ஆண்டு விழா கூட்டம் மற்றும் 2017- 18ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆசோசியேசனின் ஆண்டு விழாக் கூட்டத்தின் தலைவர் என்.குருவாயூரப்பன் மற்றும் 2016-17 ஆண்டிற்கான தலைவர் ஆர்.சரவணராஜா இருவரும் பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

இதில் தலைமை விருந்தினராக ஜேசிஐ தேசிய துணைத் தலைவர் ஆர்.எஸ்.பிரபு கலந்து கொண்டு கொசினாவின் 2016-17 ஆம் ஆண்டின் செயல்பாடுகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு மற்றும் புத்துச்சேரி அனைத்துக் கட்டுமான பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் டி.ராகவன் 2017-18 ஆண்டிற்கான நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

2017-18ம் ஆண்டிற்கான தலைவராக ஆர்.கார்த்திக், செயலாளராக ஜே.விஜயகுமார், பொருளாளராக பி.ராஜரத்தினம் உள்ளிட்டு நிர்வாகிகள், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநிலக் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சி.தில்லைராஜன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக செயலாளர் கே.பி.செல்வேள் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...