அகில இந்திய பார் கவுன்சில் முயற்சியில் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவை, கலைக்கல்லூரி சாலையில் உள்ள கோவை நீதிமன்றத்தின் கிழக்கு நுழைவாயிலில் கோவை மாவட்டம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து அகில இந்திய பார் கவுன்சில் முயற்சியால் ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தண்டபாணி கூறுகையில், தமிழகம் எங்கும் வழக்கறிஞர்களாக தொழில் செய்து வருகின்ற வழக்கறிஞர்கள் தங்களுடைய நியமான கோரிக்கைகள் எடுத்து சொல்லி போராடிய நேரங்களில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, இன்று அகில இந்திய பார் கவுன்சில் முயற்சியால் ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தொழில் செய்ய முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.



குறிப்பாக, 25 வழக்கறிஞர்கள் மீது வாழ்நாள் முழுதும் அவர்கள் தொழில் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இதையெல்லாம் கண்டிக்கின்ற வகையிலும், அவர்கள் உரிமைகள் பாதுகாக்கின்ற வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டு நடவடிக்கை அறிவிற்புக்கேற்ப கோவையில் இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதேபோல், பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடைபெறுகிறது. இதன் மூலம் இவர்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்" என அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...