தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தினார் நடிகர் விஜய்

சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி ஏற்றிவைத்தார். கட்சியின் பாடலையும் வெளியிட்டார்.


சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கட்சியின் கொடி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.



சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கட்சித் தலைவர் விஜய் கொடியை ஏற்றிவைத்து, கட்சியின் பாடலையும் வெளியிட்டார்.





இந்த நிகழ்வில் உரையாற்றிய விஜய், "இன்று நம் எல்லோருக்கும் மிகவும் சந்தோஷமான நாள். நான் என்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கி அதற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக பிப்ரவரி மாதம் கட்சியின் பெயரை அறிவித்தேன். அப்போதிலிருந்து நீங்கள் எல்லோரும் குறிப்பிட்ட நாளுக்காகக் காத்திருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. அதுதான் நம் முதல் மாநில மாநாடு. அந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாக நடந்து வருகிறது. விரைவில் அதற்கான நாள், நேரத்தை அறிவிப்பேன்," என்றார்.

மேலும் அவர், "இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி கட்சிரீதியாக நம்மை பலப்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டுக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காகவும் நாம் எல்லோரும் சேர்ந்து உழைப்போம். புயலுக்குப் பின் அமைதி, ஆர்ப்பரிப்பு, ஆராவாரம் என இந்தக் கொடிக்குப் பின்னால் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. அது என்ன என்பதையும், நம் கட்சியின் கொள்கை, செயல் திட்டங்கள் என்ன என்பதை மாநாட்டில் சொல்வோம்," என்று குறிப்பிட்டார்.



த.வெ.க கொடியில் சிவப்பு, மஞ்சள் நிறங்கள், இரட்டை யானைகள், மையத்தில் வட்ட வடிவத்துக்குள் வாகைப்பூ ஆகியவை இடம்பெற்றுள்ளன. கொடி குறித்தான விளக்கத்தை வரவிருக்கும் மாநாட்டில் தெரிவிப்பதாக விஜய் கூறினார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...