ஈஷாவின் கிராமிய விளையாட்டுப் போட்டி கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியம் இருட்டுப்பள்ளம் அருகில் நடைபெற்றது. கிராமிய விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக ஈஷா அறக்கட்டளை மற்றும் நொய்யல் நகர் இளைஞர் அணி சார்பில் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.
போட்டியில் தேவராயபுரம், மத்வராயபுரம், சாடிவயல், நதேகவுண்டன்புதூர், நரசிபுரம், ஆலாந்துறை, முகாசிமங்கலம், மோளப்பாளையம், மதுக்கரை, கரடிமடை, ஜாகீர்நாயக்கன்பாளையம் மற்றும் வெள்ளிமலைப்பட்டினம் என மொத்தம் 24 அணிகள் கலந்துகொண்டன. இப்போட்டியின் இறுதியில் மத்துவராயபுரம் அணி தேவராயபுரம் அணியை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது.

இதனைத்தொடர்ந்து, மத்துவராயபுரம் அணிக்கு முதல் பரிசு, தேவராயபுரம் அணிக்கு இரண்டாம் பரிசு, ஆலாந்துறை - பி அணிக்கு மூன்றாம் பரிசு, சாடிவயல் அணிக்கு நான்காம் பரிசு ஆகியவற்றினை சிறப்பு விருந்தினர்கள் வழங்கி கவுரவித்தனர்.