கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை

கோவை சர்வதேச விமான நிலையத்தில் சார்ஜாவிலிருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: கோவை சர்வதேச விமான நிலையத்தில், சார்ஜாவிலிருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். தங்கம் கண்டுபிடிக்கப்படாததால், அவர்கள் விமானத்தின் உள்ளே சோதனை மேற்கொண்டனர். விமானத்தின் கால் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒட்டப்பட்டிருந்த பொருட்களை ஆய்வு செய்தனர்.



விமானத்தின் உள்பகுதியில் தங்க பிஸ்கட்டுகள் டேப்பால் சுற்றப்பட்டு, இரட்டை பக்க ஒட்டும் டேப்பால் உறுதியாக ஒட்டப்பட்டிருந்தன. 24 காரட் தூய்மையான தங்கக் கட்டிகள் கடத்தி வரப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1,399 கிராம் என்றும், அதன் மதிப்பு சுமார் ரூ.1.02 கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.



பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்திற்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்கக் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...